சமூக இடைவெளி வீட்டுக்கு வெளியே தான்..! படுக்கை அறையில் இல்லை..! வைரலாகும் பிக்பாஸ் பெண் பிரபலத்தின் வீடியோ!

சமூக இடைவெளி வீட்டுக்கு வெளியே தான் என்றும் படுக்கை அறையில் இல்லை என்பதையும் நிரூபித்து காட்டியுள்ள பிக்பாஸ் பிரபலமான மீரா மிதுன், தன்னுடைய ஆண் நண்பருடன் படு கவர்ச்சியாக நடனம் ஆடும் வீடியோ பதிவை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.


பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் போட்டியில் கால் பதித்த நாள் முதலே தன்னுடைய சக போட்டியாளர்கள் உடன் சண்டை போடுவதை தன் வாடிக்கையாக கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் சேரன், தன்னுடைய இடுப்பை பிடித்து தவறாக நடந்து கொள்ள முயற்சித்த தாகவும் பொய்யான குற்றச்சாட்டை அவர் மீது வைத்தார். இதற்குப் பின்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் தொடர்ச்சியாக பல வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.

பொதுவாகவே இவருடைய வீடியோக்களை பார்த்து லைக் செய்பவர்களை விட திட்டி தீர்ப்பவர்கள் தான் அதிகம். அதாவது மீரா மிதுன் தற்போது புதிய வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கனவு காணும் விதமாக வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்மறையான வரவேற்பைப் பெற்றார் மீரா மிதுன்.

முந்தைய வீடியோவிற்கே பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள் தற்போது மீண்டும் மீராமிதுன் வெளியிட்டுள்ள புதியதொரு வீடியோவிற்கு படு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அதாவது மீரா மிதுன் கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு யோகேஷ் விஜயன் என்ற ஆண் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக நடனமாடும் விதமாக வீடியோ பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

வீடியோ பதிவை வெளியிட்ட மீராமிதுன் அதற்கு கேப்சனாக, என்னுடைய குவாரண்டின் நாட்கள் உன்னுடன் தான் கழிக்கப்பட்டு வருகிறது என அவரது ஆண் நண்பர் யோகேஷ் விஜயனை குறிப்பிட்டு கூறியிருக்கிறார். இந்த வீடியோ பதிவை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி மீராமிதுனை ட்ரால் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

அதிலும் ஒருவர் , ஓ இதுதான் உங்க சோஷல் டிஸ்டன்ஸிங்கா? என பங்கமாக மீராவை கலாய்த்திருக்கிறார். மற்றும் சிலர் ஆண் நண்பருடன் படு கவர்ச்சியாக நடனம் ஆடும் மீரா மிதுனை பார்த்து பச்சை பச்சையாக திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் ஒருவர் , நீயாமா இடுப்ப புடிச்சா என சேரன் அவர்களை அந்த கத்து கத்தன என்று கமெண்ட் செய்திருக்கிறார்.

தற்போது மீராமிதுன் பதிவிட்டுள்ள இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.