ஜி.வி .பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் புதிய திரைப்படம் குப்பத்து ராஜா. இந்த திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன், நடிகை பூனம் பாஜ்வா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் திரையுலக பிரபலத்திற்கு திருமணம்! பெண் யார் தெரியுமா?

இந்த புதிய திரைப்படத்தை போக்கஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது . இதில் M.சரவணன் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இவருக்கு தற்போது சர்வியகீர்த்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஜிவி பிரகாஷ் , ஆதித்யா ரவிச்சந்திரன் , இயக்குனர் சண்முகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மொத்தத்தில் தமிழ் திரையுலகமே திரண்டு வந்த இந்த திருமண விழாவில் பிக்பாஸ் புகழ் சரவணனும் மதுமிதாவும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் போட்டியாளர்கள் "சித்தப்பு" என்று அன்பாக அழைக்கப்பட்ட சரவணன் யாருமே எதிர்பாராதவிதமாக போட்டியை விட்டு திடீரென்று விலக்கப்பட்டார்.
போட்டியில் பங்கேற்றவரை தன்னுடைய ரசிகர்களை தனது எதார்த்தமான குணத்தின் மூலமாக கவர்ந்து இழுத்தார் என்று தான் கூற வேண்டும் . இந்த போட்டியை விட்டு வெளியேற பின் சரவணன் பொதுவாக அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை . அப்படிப்பட்ட சரவணனை திருமண விழாவில் அவரது ரசிகர்கள் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.