உன்னை விட மாட்டேன்..! காதல் வரம் கேட்பேன்..! 37 வயது நடிகை போட்டோ வெளியிட்டு சொல்வது என்ன?

37 வயதாகும் போஜ்புரி நடிகை மோனாலிசா எப்பொழுதும் ஹாட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.


நடிகை மோனாலிசா ஒரியா வீடியோ ஆல்பங்களில் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் போஜ்புரி திரையுலகிற்கு அறிமுகமாகி, அங்கு அவர் பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில், போஜ்புரி திரையுலகில் மிகவும் விரும்பப்பட்ட நடிகைகளில் மோனாலிசாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் நடிகை மோனாலிசா போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்ராந்த் ராஜ்புட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக விமர்சையாக நிகழ்ச்சியிலேயே கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மோனாலிசா எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகையாவார். எப்பொழுதும் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பிஸியாக வைத்துக் கொள்வதில் வல்லவர். அந்த வகையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே இருக்கும் நடிகை மோனாலிசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மனம் குளிர செய்திருக்கிறார்.

அந்த புகைபடத்தில் நடிகை மோனாலிசா ஸ்லீவ்லெஸ் சட்டை மற்றும் குட்டையான ஷார்ட்சை அணிந்திருக்கிறார்.மேலும் நடிகை மோனா லிசா இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, "உங்கள் வாழ்க்கை என்பது உங்களுடைய அனைத்து எண்ணங்களின் வெளிப்பாடு" என்று பதிவிட்டிருக்கிறார். நடிகை மோனாலிசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.