இதுக்கு பேர் தான் கவர்ச்சி யோகா..! 37 வயசானாலும் திகட்ட திகட்ட ரசிகர்களுக்கு ட்ரீட்!

போஜ்புரி நடிகை மோனாலிசா புன்னகையுடன் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை தன்னுடைய வீட்டிற்குள்ளேயே செய்துவிட்டு அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.


நடிகை மோனாலிசா ஒரியா வீடியோ ஆல்பங்களில் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் போஜ்புரி திரையுலகிற்கு அறிமுகமாகி, அங்கு அவர் பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில், போஜ்புரி திரையுலகில் மிகவும் விரும்பப்பட்ட நடிகைகளில் மோனாலிசாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் நடிகை மோனாலிசா போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்ராந்த் ராஜ்புட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக விமர்சையாக நிகழ்ச்சியிலேயே கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மோனாலிசா எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகையாவார். எப்பொழுதும் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பிஸியாக வைத்துக் கொள்வதில் வல்லவர். அந்த வகையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டிலேயே இருக்கும் நடிகை மோனாலிசா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சி செய்து வருகிறார். தன்னால் ஜிம்முக்கு செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே தன்னால் முடிந்ததைச் செய்ய முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் நடிகை மோனாலிசா. நடிகை மோனா லிசா பிளவுபட்ட யோகா நிலையை அடைந்திருக்கிறார். 

யோகாசனங்கள் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மோனா லிசா பதிவிட்டிருக்கிறார். மேலும் அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷனாக, முழு-ஸ்பிளிட்டில் எனது முதல் முயற்சி! லாக் டௌனின் போது பயனுள்ளதாக இருக்கும்! எனது தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் இதைப் பயிற்சி செய்ய எனக்கு போதுமான நேரம் இருந்தது . மேலும் நான் சிறு வயதிலிருந்தே இதை செய்யவேண்டுமென விரும்பினேன். இப்போது என்னால் முடிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..! இப்பொழுது சந்திரனில் இருப்பதை போல் உணர்கிறேன் என்று முதல் மகிழ்ச்சியுடன் நடிகை மோனாலிசா அந்த புகைப்படத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார். 

தற்போது நடிகை மோனாலிசா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் நடிகை மோனாலிசாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.