என் புருசன் நாசா விஞ்ஞானியாக்கும்..! நம்பி வெறும் பையனை திருமணம் செய்த பிஹெச்டி மாணவி! புதுப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

டெல்லி: நாசாவில் வேலை கிடைத்ததாகக் கூறி இளம்பெண்ணை ஒருவர் ஏமாற்றியுள்ளார்.


ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்ற நபர், சமீபத்தில்  பிஹெச்டி படித்து வரும் மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். அதாவது, இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ.,வில் விஞ்ஞானியாக பணிபுரிகிறேன், என அவர் கூறியிருக்கிறார்.

திருமணம் முடிந்து சில நாள் சென்ற நிலையில், வேலை விசயமாக, நாசா செல்வதாகவும், இந்தியா திரும்ப சில மாதங்கள் ஆகும் எனவும் கூறிவிட்டு ஜிதேந்திரா எஸ்கேப் ஆகியுள்ளார்.  இதன்பேரில் சந்தேகமடைந்த அப்பெண், ஜிதேந்திராவின் ஐடி, அடையாள ஆவணங்களை சோதித்துள்ளார்.

அப்போது, அவை போலி என தெரியவந்தது. இதையடுத்து, ரகசியமாக புலனாய்வு செய்தவர், ஜிதேந்திரா குருகிராமில் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து, குடித்தனம் நடத்தி வருவதை கண்டறிந்தார்.

இதுபற்றி உடனடியாக போலீசார், அந்த பெண் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஜிதேந்திராவை தேடிச் சென்றபோது, அவர் குருகிராமில் இருந்து தலைமறைவாகி விட்டார்.