தனி ஒருவனாக மாஸ் காட்டிய நியூஸி வீரர்…

இலங்கைக்கும் நியூஸிலாந்திற்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நியூஸிலாந்தின் ஹக்லே ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி நியூஸிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.


முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய அந்த அணியின் நட்சத்திர வீரர் வில்லியம்சன்ரன்களில் அவுட் ஆனார். ராஸ் டைலர் 27 ரன்களும்ஹென்றி நிக்கோலஸ் 1 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் அந்த அணியின் வாட்ளிங் உடன் டிம் சௌதீ ஜோடி சேர்ந்தார். 8 வது வீரராக ம் இறங்கிய டிம் சௌதீ சிறப்பாக விளையாடி 6 பவுண்டரி , 3 சிக்ஸர்களை விளாசி 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். வாட்ளிங் 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

இதனால் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்களை எடுத்தது. இலங்கை அணியின் லக்மால் அபாரமாக பந்து வீசி 5விக்கெட்களையும்,லஹிரு குமரா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 88 ரன்களை சேர்த்துள்ளது. பேட்டிங்கில் கலக்கிய டிம் சௌதீ பவுலிங்கிலும் அசத்தினார். இவர் இலங்கை அணியின் முதல் மூன்று வீரர்களை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச்செய்தார்