தினமும் உடல் உறவு..! ஆண் - பெண்ணுக்கு ஏராளமான நன்மை! என்னென்ன தெரியுமா?

தினமும் உடலுறவு கொண்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தியில் நாம் பார்ப்போம்.


தினமும் உடலுறவு கொள்வதன் பயன்களை ஆராய்வதற்காக ஆராய்ச்சி மையம் ஒன்று ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகளின் மூலம் தினமும் உடலுறவு கொள்வதன் பயன்கள் ஏராளமானதாக உள்ளதாக கூறப்படுகிறது.

தினமும் உடலுறவு கொண்டால் ஆரோக்கியம் மேம்படும். சளி, தலைவலி முதலிய போது பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். உடலுறவு கொள்ளும்போது நம் உடலிலிருந்து ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் வெளியாகிறது. இந்த ஹார்மோனானது நமது மூளையை சிறிது ரிலாக்ஸ் செய்யும் தன்மையை கொண்டது.

தினசரி உடலுறவின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். மேலும் நோய் தொற்றுக்கள் ஏற்படாமலும் நம்மால் தடுக்க இயலும். உச்சகட்டத்தை அடையும் போது வெளிவரும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் இரவில் நிம்மதியான தூக்கத்தை தரும். அன்றாட உடலுறவில் ஈடுபடும் போது இரத்த நாடிகள் தூய்மையடைந்து இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். தினசரி உடலுறவில் ஈடுபட்டால் வயிற்று பிடிப்பிலிருந்து பெண்கள் விடுபடலாம்.

தினமும் உடலுறவு கொள்வதன் மூலம் பெண்களுக்கு இடுப்பு தசைக்கு உடற்பயிற்சி செய்தவாறு அமையும். தினமும் உடலுறவு செய்வதன் மூலம் கீழ் முதுகு தண்டில் ரிலாக்சேஷன் ஏற்படும்.

பெண்கள் தினமும் உடலுறவு கொள்ளும் போது, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் முதலிய நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

இறுதியாக 30 நிமிடம் உடலுறவு கொள்வதற்கு சமமானது 30 நிமிடம் உடற்பயிற்சி. ஆகையால் கணவன் மனைவி மகிழ்ந்து உடலுறவு கொண்டால் இருவரும் உடல் நலத்திற்கும் பயனுள்ளதாக அமையும் என்று ஆய்வறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.