விரதம் எண்ணும் வழக்கம் பல மதத்தவராலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.இருந்தும் விரதம் என்பது தெய்வநம்பிக்கை என்று பலராலும் மூடநம்பிக்கை என்று பலராலும் விமர்சிக்கபட்டே வருகின்றன . அதை தெளிவுப்படுத்தும் வகையில் சில ஆழ்ந்த மருத்துவ விவரங்களுடன் இந்த செய்தி.
விரதம் இருந்தா கடவுள் என்ன குடுப்பாருன்னு தெரியணுமா? அப்ப இதைப் படிங்க முதல்ல!

அனைத்து மதத்தினருமே இறைவனுக்காக விரதம் கடைப்பிடிப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஏதேனும் ஒரு நேரம் மட்டும் சாப்பிடாமல் இருப்பது அல்லது ஒரு நாள் சாப்பிடாமல் இருப்பது என்று ஆளுக்கு
ஒவ்வொரு விதமாக விரதம் இருக்கிறார்கள். இது தேவைதானா?
கண்டிப்பாக தேவைதான். ஆன்மிக விரதத்துக்குப் பின்னே மாபெரும் மருத்துவ பலன் அடங்கியிருக்கிறது. அதனால்தான் மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிவித்திருக்கிறார்கள்.
விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப் படுகிறது. உடலியக்கம் சீராகிறது. விரதம்
இருப்பதால் தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதயம் சம்பந்தமான நோய்களும் விரதம்
இருப்பவர்களுக்குக் குறைவாகவே வருகிறது.,
நேரத்துக்கு உணவு சாப்பிடவில்லையென்றால் உடல்நலம் கெட்டுவிடும் என்ற பயம் பலருக்கு இருக்கிறது. உண்மையில் நோயற்ற ஒரு மனிதரால் 50 முதல் 75 நாட்கள் சாப்பிடாமல் உயிருடன் இருக்க முடியும். காரணம், மனதஉடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்டு கொழுப்பும் சுமார் 3,500 கலோரிகளுக்கு இணையானது.
அதனால் உடல்நலன் குறித்த அச்சம் இருந்தால், ஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது கண்காணிப்பின் கீழ் விரதம் மேற்கொள்வது நல்லது. உண்ணாவிரதம் காரணமாக பெரும் அளவிலான கழிவுப் பொருள்கள் வெளியேறும். உடலில் இருக்கும் கொழுப்பு குறையும்.இறந்த செல்கள் வெளியேற்றப்படும். நோயுற்ற செல்கள்,இறந்த செல்கள், குடலின் உட்சுவரில் படிந்திருக்கும் அழுத்தமான திசு சுவர், ரத்தம், கல்லீரல்,சிறுநீரகம் ஆகிய பொருள்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் உடலில் இருந்துவெளியேறும். உடலில் இருக்கும் நச்சுப் பொருள்கள் குறைந்ததும் ஒவ்வொரு செல்லின் திறனும்மேம்படும். இதனால், நோயுற்றஉடல் சீக்கிரம் குணமாகும்.
மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உண்ணா விரதம் மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. அந்த காலகட்டத்தில் அவர்கள் தேவையான வாழ்க்கை முறைமாற்றத்தையும் டயட் மாற்றத்தையும் மேற்கொள்ளலாம். உடலில் இருந்தும் ரத்தத்தில் இருந்தும் நச்சுப் பொருள்கள் வெளியேறுவதால் மனதில் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது.முடிவெடுக்கும் தன்மை கூர்மையடைகிறது. குறைவாகச்சாப்பிடுவதால் சக்தி சேமிக்கப் படுகிறது. இந்த சக்தியை சிந்திக்கும் பணிகளுக்குப் பயன்படுத்துகிறது மூளை.