கண்ணாடி வளையலுக்கும் ரத்தவோட்டத்துக்கும் உள்ள தொடர்பு தெரியுமா?

காலம் காலமாகவே நம் முன்னோர்கள் பெண்கள் வளையல் அணிந்து கொள்ளாமல் இருக்க கூடாது என்று கூறி வருகின்றார்கள்.


அதுவும் சுமங்கலிப் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கையில் கண்டிப்பாக வளையல் அணிந்திருக்க இருக்க வேண்டும். பெண்கள் வளையல் அணிந்து கொள்ளாமல் இருந்தால் அது அமங்கலம் என்பதையும் சாஸ்திரம் கூறுகின்றது. வளையல்களில் எத்தனையோ வகையான வளையல்கள் இருந்தாலும் இந்த கண்ணாடி வளையலுக்கென்று என்று ஒரு தனி சிறப்பு உண்டு. அந்த காலங்களில் எல்லாம் நம் வீடுகள் அமைதியாக இருக்கும் நேரங்களில் பெண்களின் கைகளில் இருக்கும் கண்ணாடி வளையலில் இருந்து வரும் ஒலியானது நம் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொடுக்கும்.

ஆனால் இந்த காலத்தில் சில பெண்கள் கண்ணாடி வளையல் அணியும் பழக்கத்தை குறைத்துக் கொண்டார்கள்.வீட்டில் நேர்மறை ஆற்றல் ஏற்படுவதற்கு கடைகளில் விற்கும், ஒலியெழுப்பும் கருவிகளை வாங்கி தொங்க விடுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு நாம் அணிவிக்கப்படும் வளையல் ஒரு காப்பாக, அதாவது கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காகவே அணிவிக்கப்படுகிறது. இதன் மூலமாகத்தான் இதற்கு வளைகாப்பு என்ற பெயரே வந்தது.

இந்த கண்ணாடி வளையலில் இருந்து எழுப்பப்படும் சத்தம் குழந்தைக்கு நேர்மறை ஆற்றலை உண்டாகுமாம். கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இந்த கண்ணாடி வளையலில் ஓசை இருந்தால் பெண்களிடம் தீய சக்திகள் அண்டாது. கண் திருஷ்டியும் அண்டாது. நம் வீட்டில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கும்.

இந்த கண்ணாடி வளையலின் ஓசையானது பெண்களின் காதில் கேட்டுக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு மன அமைதியும் ஏற்படும். இதனால் நம் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படாத நிம்மதியான சூழ்நிலை அமையும். அதுமட்டுமல்லாமல் உடம்பில் இருக்கும் நல்ல ஆற்றலானது நம் கைகளின் வழியாக வெளியேறும் சமயத்தில், அந்த ஆற்றலை வெளியேற விடாமல் நம் கையில் அணிந்திருக்கும் வளையலானது, மூட்டு பகுதியிலேயே, தடுத்து விடுகிறது என்ற ஒரு அறிவியல் சார்ந்த உண்மையும் இதில் அடங்கியுள்ளது.

உடைந்த கண்ணாடி வளையல்களை பெண்கள் அணிந்து கொள்ளக் கூடாது. அந்த உடைந்த விரிசலின் மூலம் கெட்ட சக்திகள் ஊடுருவும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் கண்ணாடி வளையல்கள் எதிர்பாராமல் உடைந்துவிட்டால் அதற்கு எந்தக் கெட்ட சகுணமும் இல்லை. உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும் இருந்த பெரிய கண்திருஷ்டியாது மறைந்து விட்டது என்றுதான் அர்த்தம்.

உங்கள் வீட்டில் இருக்கும் எந்த ஒரு கண்ணாடி பொருள் உடைந்தாலும், அந்த கடவுளின் ஆசியினால் உங்கள் வீட்டில் இருந்த தீய சக்திகளும், கண் திருஷ்டியும் மறைந்து விட்டது என்பதை தான் குறிக்கின்றது.