பித்தப்பை, சிறுநீரக கற்கள போன்ற பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது பீட்ரூட் !!

அதிக முக்கியத்துவம் அளிக்காத பீட்ரூட், உண்மையில் ஒரு சத்துக் கிடங்கு என்பது பலருக்கும் தெரியாது. ஏனென்றால் பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், தாமிரம், செலினியம், துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.


பீட்ரூட்டை சமைக்காமல் அப்படியே சாப்பிடவும், சாறு எடுத்து பயன்படுத்தவும் முடியும். அழகுக்காகவும் பீட்ரூட்டை வெளிப்பூச்சாக பயன்படுத்தலாம்.

• வயிற்றுப் புண் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்துவந்தால் விரைவில் குணமாகி விடும்.

• பீட்ரூட் சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால், சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறும்.

• பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

• நாள்தோறும் பீட்ரூட் ஜூஸ் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும். செரிமானப் பிரச்னையும் தீரும்

பீட்ரூட்டை எலுமிச்சை சாறில் நனைத்து பச்சையாகச் சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் நரம்புகள்  சுறுசுறுப்படையவும் பீட்ரூட் உதவுகிறது.