சென்னை: தனது பெயரில் பரவி வரும் ஆபாச வீடியோ பற்றி லோஸ்லியா விளக்கம் அளித்துள்ளார்.
படுக்கை அறை காட்சிகள்..! முதல் முறையாக வாய் திறந்த பிக்பாஸ் லாஸ்லியா.! ஆனால்?

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லோஸ்லியா, பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். தற்போது சிரியல்கள் மற்றும் புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், லோஸ்லியாவின் ஆபாச வீடியோ என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் இருப்பவர் லோஸ்லியா என்று ஒரு தரப்பினர் தகவல் பகிர, லோஸ்லியா ஆதரவாளர்கள் இது தவறான தகவல் என மறுப்பு கூற, ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப் என எங்கு பார்த்தாலும் கடந்த ஒரு வாரமாக இதுதான் டிரெண்டிங் விசயமாக உள்ளது. இந்நிலையில், லோஸ்லியா தன்னைப் பற்றி பரவும் வீடியோவிற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''பொய்யும், புரட்டும் நிறைந்துள்ள இந்த உலகில் நாம் மட்டும் தனியாக இல்லை. நம்மைப் போலவே உண்மையை நம்புவோர் சிலரும் உள்ளனர். உலகம் முழுக்க எதிர்மறை எண்ணங்கள், நீதி, நியாயம் சொல்பவர்கள், அச்சத்தில் உழல்பவர்கள் நிறைய இருந்தாலும், அவற்றையே முழுதாக நம்பி உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். நம்மைப் பற்றி பொய் பரப்புவோருக்கும் சேர்த்து நாம் மகிழ்ச்சியுடன், உற்சாகமாகவும் வாழ்ந்திடுவோம்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.