முகம், தலைமுடி ஆகியன சுத்தமாய் இருந்தால் மட்டும் போதுமா? கை, கால்களும் அழகாய்த் தோற்றமளிக்க வேண்டாமா?
வீட்டிலேயே கை விரல்கள், கால் விரல்களை அழகாக்கும் வழி தெரியுமா?
கைகளைச் சுத்தம் செய்து, நகங்களை வெட்டி, சீராக்கி நக இடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, கை விரல்களுக்கு கிரீம் தடவி மசாஜ் செய்யும் முறை ‘மெனிக்யூர்’ எனப்படும்.
இதுபோலவே, வெந்நீரில் கால்களை 10 நிமிடம் அமிழ்த்தி, கால்களில் உள்ள பித்த வெடிப்பு, அழுக்கு ஆகியவற்றை ‘ப்யூமிங் ஸ்டோன்’ எனப்படும் கல்லில் தேய்த்து நீக்கி, விரல் நகங்களை ஷேப் செய்து, நகங்களிலுள்ள அழுக்குகளை வெளியேற்றி, கால் பாதங்களுக்கு மசாஜ் செய்யும் முறை ‘பெடிக்யூர்’ ஆகும்.
இந்த இரு முறைகளையுமே பார்லர்களில் ஒருமுறை செய்து கொண்டு, அந்த முறைகளை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொண்டு, வீட்டில் பத்து நாளைக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம். இதன் மூலம் கை, கால்கள் மிருதுவாகவும், அழகாகவும் விளங்குவதுடன் இரத்த ஓட்டமும் சீராகும்.