எனக்கு கணவன், 2 பிள்ளைகள்..! So கல்யாணம் மட்டும் வேண்டாம்..! பயங்கரத்தில் முடிந்த 33 வயது பியூட்டி பார்லர் பெண் - 28 வயது இளைஞன் தகாத உறவு!

திருமணத்திற்கு மறுத்த பியூட்டி பார்லர் நடத்தி வரும் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் முத்தூர் என்ற பகுதிக்கு அருகேயுள்ள கொடுமுடி ஹை ஸ்கூல் பகுதியை சார்ந்தவர் யுவராஜ். இவருக்கு வயது 37. இவரது மனைவி சங்கீதா .இவருக்கு வயது 33. திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சங்கீதா பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் 28 வயதாகும் திருமணமாகாத விவேக் என்பவர் பைனான்ஸ் தொழில் நடத்திவருகிறார். பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் விவேக் என்பவரிடம் ப்யூட்டி பார்லர் நடத்தி வரும் சங்கீதா தொழிலுக்காக பணத்தை வாங்கியுள்ளார்.

அந்த பணத்தை திரும்ப வாங்குவதற்காக அடிக்கடி விவேக் சங்கீதா நடத்திவரும் பியூட்டி பார்லருக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் நேற்றிரவு விவேக் சங்கீதாவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளார். சங்கீதாவின் கணவர் யுவராஜ் வெளியே வந்து பார்த்துள்ளார். இந்நிலையில் விவேக், யுவராஜின் முகத்தில் குத்தி அவரை வெளியே தள்ளிவிட்டார்.

பின்பு சத்தம் கேட்டு சங்கீதா மற்றும் அவரது பிள்ளைகள் வெளியே வந்தனர். யுவராஜ் சங்கீதாவின் பிள்ளைகளை ரூமுக்குள் அடைத்து, சங்கீதாவை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் அதற்கு சங்கீதா மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் விவேக் சங்கீதாவின் வாயில் சல்பாக் மாத்திரைகளை திணித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர். சங்கீதாவின் கணவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று விவேக்கை தள்ளிவிட்டு பார்த்தபோது அவரது மனைவி சங்கீதா உயிரிழந்த நிலையில் இருந்தார். இதனை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் பதறிய அவரது கணவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இந்நிலையில் சங்கீதாவை கொலை செய்த விவேக்கும் மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறியதால் அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.