கடைசி பஸ் மிஸ்ஸிங்..! தெரிந்த ஆணுடன் கார் பயணம்..! மறுநாள் குட்டையில் சடலமாக கிடந்த பியூட்டிபார்லர் ஷோபனா.! திருச்செங்கோடு திகுதிகு!

பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வரும் பெண் மர்மமான முறையில் இறந்திருப்பது திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு இயங்கி வரும் பெண்கள் அழகு நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஷோபனா என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார். ஷோபனா இறையமங்கலம் பகுதியை சேர்ந்தவராவார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவருடைய கணவரின் பெயர் செந்தில். 

வழக்கமாக ஷோபனா திருச்செங்கோட்டில் இருந்து இறையமங்களத்திற்கு பேருந்தில் வருவார். நேற்று முன்தினம் இரவு கடைசி பேருந்தை தவற விட்டதாக செந்திலை தொடர்புகொண்டு கூறியுள்ளார். அப்போது தெரிந்த நபர் ஒருவருடன் காரில் வருவதாகவும் ஷோபனா கூறியுள்ளார்.

ஆனால் இரவு 9 மணி ஆகியும், சோபனா வீட்டிற்கு வராததை தொடர்ந்து அவருடைய உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தனர். எங்கும் சோபனா கிடைக்காததால் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நள்ளிரவு முழுவதும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். ஆனால் காவல்துறையினரால் கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில் நேற்று காலை புள்ளிபாளையம் பகுதிக்கு அருகேயுள்ள குட்டையொன்றில் ஷோபனாவின் சடலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். சோபனா மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்ட அவருடைய உறவினர்கள் அப்பகுதியில் கதறி அழுதனர். அருகிலிருந்த காட்டுப்பகுதியில் சோபனா தன்னுடைய மகனுக்காக ஆசை ஆசையாக வாங்கி வந்த புத்தாடைகள் சிதறி கிடந்தன.

இந்த சம்பவமானது இறையமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.