ஓரினச்சேர்க்கை! பிரபல ஆண் இயக்குனரின் ஆண் துணை வெளியிட்ட பகீர் புகைப்படம்!

ஹிந்தி திரை உலகின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான "கரண் ஜோஹர்" தன்னுடைய 47-வது பிறந்தநாளை கடந்த சனிக்கிழமை (மே 25) அன்று அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.


இவருக்கு உலகில் உள்ள பாலிவுட் பிரபலங்கலான ஆலியா பட், கத்ரீனா கைப், அர்ஜுன் கபூர் , சோனம் கபூர் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.   இதில் அமெரிக்க-நேபாலீஸ் பேஷன் டிசைனரான "பிரபால் குருங்" அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மட்டும் நெட்டிசென்கள் கலாய்த்த வண்ணம் உள்ளனர். 

பிரபால் குருங், தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் கரனுடன் இணைந்து உள்ள விதமாக உள்ள புகைப்படம் ஒன்றை வெளியீட்டார். இதில் கரண், பிரபாலின் கழுத்து பகுதியை பிடிப்பது போன்று உள்ளது அந்த புகைப்படம்.  அத்தோடு கேப்சனாக, "நாம் காதலிக்கும் போது எதற்காக அஞ்ச வேண்டும், ஹாப்பி பர்த்டே கரண் " என்று பதிவு இட்டு இருந்தார்.

இதற்கு கரண் ஜோஹர், "கண்ட்ரோல் யுவர் செலஃப பையா" என்று பதில் அளித்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர்கள் இருவரையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என கலாய்த்த வண்ணம் உள்ளனர்.  முன்னதாக இவர்கள் இருவரும் லிவிங்டுகெதர் உறவு முறையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.