வைகை ஆற்றின் குறுக்கே மாடக்குளத்தில் தடுப்பணை! கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 7.3.2018 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டின் போது, “வைகை ஆற்றின் குறுக்கே மாடக்குளத்தில் தடுப்பணை கட்டப்படும்” என்று அறிவித்தார்.


அதன்படி, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், மாடக்குளம் கண்மாய்க்கு நீர் வழங்கி மதுரை நகராட்சிக்குட்பட்ட பொன்மேனி, எல்லீஸ்நகர், பழங்காநத்தம், எஸ்.எஸ்.காலனி, மாடக்குளம் மற்றும் டி.வி.எஸ் நகர் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீரை செறிவூட்ட itif ஆற்றின் குறுக்கே 17 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள். 

இத்தடுப்பணை கட்டப்படுவதால் மாடக்குளம் கண்மாய், கீழமாத்தூர் கண்மாய் மற்றும் துவரிமான் கண்மாய் ஆகிய கண்மாய்களில், அதன் மொத்த கொள்ளளவான 215.89 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிப்பது உறுதி செய்யப்படுவதோடு, 3360.13 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்தினால் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பொன்மேனி, எல்லீஸ்நகர், பழங்காநத்தம், எஸ்.எஸ்.காலனி, மாடக்குளம் மற்றும் டி.வி.எஸ் நகர் ஆகிய பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடைவதுடன் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். 

மேலும், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், திருமங்கலம் பிரதான கால்வாயின் 1-வது கிளைக் கால்வாயை 6 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி மற்றும் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், சீவலப்பேரி குளத்தைச் சுற்றி 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணி;

என மொத்தம் 24 கோடி 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 நீர்வள ஆதாரத் துறையின் திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்கள். சொன்னதை செய்த எடப்பாடியின் செயலைக் கண்டு மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

பொதுப்பணித் துறையில் 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டுகளுக்கான 148 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.