அதிவேகம்! சாலைத் தடுப்பில் மோதி பல்டி அடித்த கார்! உள்ளே இருந்த 8 பேரின் கதி! நாட்றாம்பள்ளி பரபரப்பு!

சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரின் மீது கார் மோதியதில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவமானது நாட்டறம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் எனும் இடத்தை சேர்ந்தவர் விஜயன். விஜயனின் வயது 45. இவர் தன்னுடைய குடும்ப நண்பர்களுடன் சேர்ந்து ஓசூரில் உள்ள உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காரில் புறப்பட்டார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு நேற்று காலை அனைவரும் குடியாத்தத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது விஜயன் காரை ஓட்டி வந்துள்ளார். நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புக்குட்டை என்னும் இடத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது கார் விஜயனின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சென்றுள்ளது. பிறகு சாலையின் நடுவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரின் மீது கார் வேகமாக மோதியது.

மோதிய அதிர்ச்சியில் 8 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த நாட்டறம்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து அனைவரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவமானது நாட்டறம்பள்ளியின் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.