பார்லி என்பது நோயாளிக்கு மட்டுமா… உடலை குறைக்கும் தெரியுமா?

இப்போது நோயாளிகள் மட்டுமே பார்லி தண்ணீர் குடிக்கிறார்கள். உண்மையில் ஆரோக்கியமான அனைவரும் பார்லி எடுத்துக்கொள்வது சிறந்த சத்துணவாக இருக்கும்.


·         பார்லியில் புரதம், பாஸ்பரஸ், பி காம்ப்ளக்ஸ்வைட்டமின்கள் நிரம்பியிருப்பதால் மூளைக்கு அதிக புத்துணர்வு கிடைக்கிறது. அத்துடன் நரம்புகளும் சுறுசுறுப்பு அடைகின்றன.

·         உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தினமும் பார்லி குடித்துவந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். உணவு உட்கொள்ளும் அளவு குறைந்து விரைவில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

·         தினம் ஒரு கப் பார்லி தண்ணீர் குடித்து வருபவர்களுக்கு ஜீரண பிரச்னைகள், மூலநோய் ஆபத்து எளிதில் அண்டுவதில்லை.