காலணிகள் இல்லாமல் 14 கிமீ நடையாய் நடந்த ஸ்மிருதி இரானி! ஏன் தெரியுமா?

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்ததைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் ஸ்மிருதி இரானி மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி வினாயகர் கோவிலுக்கு வெறும் காலில் 14 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாகச் சென்றார்.


இரானியுடன் அவரது நீண்ட கால தோழியும் இரானி பிரபலமடையக் காரணமாக இருந்த தொலைக்காட்சித் தொடரை தயாரித்தவருமான ஏக்தா கபூரும் உடன் சென்றார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்மிருதி இரானியும் தானும் உள்ள  புகைப்படத்தை பதிவிட்டு 14 கிலோமீட்டர் தூரம் காலணியின்றி பாதயாத்திரை மேற்கொண்ட மன உறுதி என பாராட்டியிருந்தார். 

அதற்கு அது கடவுளின் அருள் என்றும், கடவுள் தயவானவர் என்றும் ஸ்மிருதி இரானி பதில் அளித்திருந்தார். தான் வாழ்வில் பல வெற்றிகளை அடைந்த போதெல்லாம் ஏற்படாத மகிழ்ச்சி சித்திவிநாயகர் கோவிலை நடந்து சென்று அடைந்த போது ஏற்பட்டதாக ஏக்தா கபூர் பதிவிட்டுள்ளார். 

வாடகைத் தாய் மூலம் பிறந்த ஏக்தா கபூரின் 4 மாத மகனும் சித்தி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்த நிலையில் பின்னர் அனைவரும் காரில் வீடு திரும்பினர்.