சென்னையில் மேலும் ஒரு துயரம்! சரிந்தது பிரமாண்ட பேனர்! படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி!

பேனரை அகற்றும் போது எதிர்பாராவிதமாக கீழே விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவமானது பெருங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சில நாட்களுக்கு முன்னர் ஸ்வாதி என்ற இளம்பெண் மீது பேனர் விழுந்து உயிரை பறித்த சம்பவமானது தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் ஒரு டாஸ்மாக் ஊழியரின் மீது பேனர் விழுந்து படுகாயமடைந்த சம்பவமானது நிகழ்ந்தது. பேனர்களில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் வண்ணமுள்ளன.

இந்நிலையில் பேனரினால் மேலும் ஒரு துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கரணை ரமணியம் பகுதியில் மிகவும் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 60 அடி உயரமான பேனர் கட்டப்பட்டிருந்தது. பல வாரங்களானதால் அந்த பேனரை கழுற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது எதிர்பாராவிதமாக அந்த பேனர் அறுந்து விழுந்தது. பேனர் ஆனது சாலையில் சென்று கொண்டிருந்த ராஜேஷ் என்பவர் மீது விழுந்தது.  இதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ராஜேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு வாரத்திற்குள் பேனர் சீர்கேடுகளால் 3 துயர சம்பவங்கள் அரங்கேறியுள்ளதை பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர். இந்த சம்பவமானது பெருங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.