தனிமையில் இருந்த 14 வயது சிறுமி! வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்தி 34 வயது பேங்க் அதிகாரி அரங்கேற்றிய பகீர்! கோவை அதிர்ச்சி!

9-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வங்கி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்திலுள்ள செல்வபுரம் என்னும் பகுதிக்குட்பட்ட தில்லைநகர் என்ற இடத்தில் ராம்குமார் என்ற 34 வயது நபர் வசித்து வருகிறார். அப்பகுதியில் அமைந்துள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய வீட்டிற்கு அருகே 14 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அந்த இளம்பெண் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் ராம்குமார் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்துள்ளார். பின்னர் அந்த மாணவியை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளார். நிகழ்ந்த சம்பவத்தைப் குறித்து வெளியே தெரிவித்தால் மாணவியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். 

இதனால் பயந்து போன மாணவி நிகழ்ந்தவற்றை தன்னுடைய பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் செல்வபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ராம்குமாரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.