வங்கி மாதத் தவணை (EMI) நிறுத்திவைப்பு..! யார் யாருக்கு பொருந்தும்? வட்டி அதிகரிக்குமா?

வங்கி மாதத் தவணை நிறுத்திவைப்பு சம்பந்தமான சந்தேகங்கள்-கேள்வி-பதில்.


#எனது மாதத்தவணை தள்ளுபடி ஆகி உள்ளதா?

இல்லை, மூன்று மாதங்களுக்கு மாதத்தவணை நிறுத்திவைப்பு மட்டுமே தள்ளுபடி அல்ல #எனது வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பணம் இந்த மாதம் எடுக்கப்படுமா? ஆம், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு நிறுத்தி வைக்க மட்டுமே அனுமதி தந்துள்ளது.

ஒவ்வொரு வங்கியும் தானாகவே மாதத்தவணை நிறுத்தி வைக்க இதுவரை உரிமை இல்லை. அப்படி மூன்று மாதங்கள் தவணை வரவில்லை என்றால் அந்த கடன் பணம் முழுவதும் மொத்தமாக வசூலிக்க வேண்டும் இது நடைமுறையில் உள்ள சட்டம்.

இந்த சட்டத்தில் இந்த மூன்று மாதங்களுக்கு விலக்கு தந்து வங்கிகள் தாங்களாகவே முடிவு எடுத்துக் கொள்ள அனுமதி தந்துள்ளது. அப்படி என்றால் எனது மாதத்தவணை நிறுத்தி வைக்க நான் என்ன செய்ய வேண்டும்?

வங்கிகளுக்கு எழுத்து மூலமாக அல்லது வாய்மொழியாகவோ கோரிக்கை வைக்க வேண்டும். சில வங்கிகள் கோரிக்கை இல்லாமல் தாங்களாகவே நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. இது அந்த அந்த வங்கிகள் எடுக்கும் முடிவு. இப்பொழுதுதான் அறிவிப்பு வந்ததினால் வங்கிகள் முடிவெடுக்க சில நாட்கள் எடுக்கும்.

மூன்று மாதம் கழித்து நான் மொத்தமாக பணம் செலுத்த வேண்டுமா?

இது உங்கள் கோரிக்கைகளை பொறுத்தே. நீங்கள் இந்த மூன்று மாதங்களும் கட்டாமல் இருந்து ஜூன் மாதம் மொத்தமாக மூன்று தவணை களையும் செலுத்தலாம் அல்லது இந்த மூன்று தவணைகளை கடைசியாக கட்டலாம் அதாவது எத்தனை மாதங்கள் தவணை பாக்கி உள்ளதோ அத்தனை மாதங்கள் கட்ட வேண்டும். இந்த மூன்று மாதங்கள் கட்டவில்லை என்றால் கடன் முடிவது மூன்று மாதங்கள் தள்ளிப் போகும்.

மூன்று மாதம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிப்பார்களா?

இல்லை அபராதமோ அல்லது அபராத வட்டி மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கு வங்கிகள் பிடிக்கக்கூடாது.

இந்த மூன்று மாதங்களுக்கு வட்டி உண்டா?

உண்டு, வட்டி அசல் உடன் சேர்ந்து கொள்ளும்

மார்ச் மாதத்திற்கான வங்கி தவணை செலுத்திவிட்டேன் எனக்கு மூன்று மாதங்கள் கழித்து அடுத்த தவணை கட்டலாமா

நீங்கள் 2 மாதம் மட்டுமே நிறுத்தி வைக்க முடியும் ஜூன் மாதம் தவணை கட்ட வேண்டும்.

இப்போது நான் வங்கிக்கு கூறினால் வரும் ஏப்ரல் மாதத்திற்கு உண்டான ECS நிறுத்தி வைப்பார்களா?

இசிசி நிறுத்துவோ புதிதாக பிடிக்கவோ 20 நாட்களுக்கு முன்னரே செயல்படுத்தி வைக்கப்படும். 16ஆம் தேதி வரை உள்ள ECS கண்டிப்பாக பிடிக்கப்படும். தங்களது வங்கியில் பணம் இல்லை என்றால் அதற்கான அபராதம், அபராத வட்டி எடுக்கப்படாது.

நான் பிப்ரவரி மாதம் மாதத் தவணை கட்டவில்லை எனக்கு மூன்று மாதங்கள் தவணை நிறுத்திவைப்பு உண்டா?

இது மார்ச் ஏப்ரல் மே மாத தவணை களுக்கு மட்டுமே. அதற்கு முந்தைய தவணைகள் கட்டவில்லை என்றால் கண்டிப்பாக கட்ட வேண்டும் அதற்கு வட்டி மற்றும் அபராதம் உண்டு.

நான் பழைய மூன்று மாதத் தவணைகள் செலுத்தவில்லை என்று வங்கி கடிதம் அனுப்பி உள்ளது இதை நிறுத்தி வைப்பார்களா?

இல்லை, மார்ச் ஒன்றாம் தேதிக்கு முன்பு மூன்று தவணைகள் பாக்கி இருந்தால் தங்களுக்கு இது பொருந்தாது. மூன்று தவணைகள் மார்ச் 1 க்கு முன்பே பாக்கி இருந்தால் வங்கிகள் சட்டநடவடிக்கை மூலம் தங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யவோ விற்கவோ உரிமை உண்டு.

அதற்கும் இந்த தவணைகளை நிறுத்தி வைக்கும் அறிவிப்புக்கும் சம்பந்தமில்லை.

வங்கி கிரெடிட் கார்ட் வாங்கியுள்ளேன் இந்த மூன்று மாதங்கள் தவணை நிறுத்தி வைப்பார்களா?

ஆம், ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்ட சுற்றறிக்கையின் படி வங்கி கிரெடிட் கார்டு தவணைகளும் சேரும்.

இந்த மூன்று மாதங்கள் நான் கட்டவில்லை என்றால் எனது சிபில் ஸ்கோர் பாதிக்கப்படுமா?

இந்த மூன்று மாதங்களுக்கு சிபிலில் எந்த வங்கியும் எந்தக் கடனையும் பற்றி அறிவிக்காது.

எனது சொத்துக்களை ஏலம் விடப் போவதாக வங்கி அறிவிப்பு செய்திருந்தனர் இன்றைய அறிவிப்பில் எனக்கு ஏதேனும் சலுகைகள் உண்டா?

மார்ச் ஒன்றாம் தேதிக்கு முன்பு மூன்று தவணைகள் பாக்கி இருந்தாலோ அல்லது செயல்படாத கணக்காக தங்கள் கணக்கை மாற்றி இருந்தாலோ அது அப்படியே தொடரும் இந்த அறிவிப்பு உங்களுக்கு எந்தவித சலுகையும் காட்டப்பட மாட்டாது. இது மார்ச் ஏப்ரல் மே மாத தவணைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

- உலகம் இப்படித்தான்.

News Courtesy: #அன்புத்தோழன்