முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி! பிங்க் நிற பந்தில் தெறிக்கவிட்ட இந்திய பவுலர்கள்! 106 ரன்களுக்கு பங்களாதேஷ் ஆல் அவுட்!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியது.


வரலாற்று சிறப்புமிக்க இந்த பகலிரவு போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பகலிரவு போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுவதால் பந்து எதிர்பார்த்ததைவிட அதிக அளவு ஸ்விங் ஆனது. 

இதனால் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்கு அனைத்து வகைகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஸ்லாம் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், முகமது ஷமி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹா பந்து எந்த பக்கம் பிங்க் ஆனாலும் திறமையாக கீப்பிங் செய்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.