ஆசை வார்த்தை கூறி உல்லாசம்! நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்! ஆண்களை வலையில் வீழ்த்தும் பெண்கள் கும்பல்!

வேலூர்: ஆசை வார்த்தை கூறி ஆண்கள் பலரையும் வீடியோ எடுத்த பெண் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பெங்களூருவைச் சேர்ந்தவர் அப்துல் ரிப் ஆரிப். பெரும் தொழிலதிபரான இவர், வேலூரில் உள்ள தனது தாயாரை பார்த்துக் கொள்ள, உதவியார் வேண்டும் என, ஊடகங்களில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில், ஒருநாள் அவருக்கு, தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், அந்த பணியை செய்வதாகக் கூறி, ஆபிதா என்ற பெண், பேசியுள்ளார்.

நேரில் வரும்படி, அப்துல் ரிப் ஆரிப்பை, அந்த பெண் அழைத்துள்ளார். இதன்பேரில், வாணியம்பாடிக்கு, அப்துல் ரிப் ஆரிப் சென்றுள்ளார். ஆனால், அவரை, ஆட்டோவில் அழைத்துச் சென்ற அந்த பெண், 10 பேர் கொண்ட கும்பலின் நடுவே தள்ளியுள்ளார். அங்கு, அரை குறை ஆடையில், பெண்கள் சிலருடன் உடல் உறவு கொள்வது போல, ஆரிப்பை மிரட்டி அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர், அவரிடம் இருந்த 3 லட்சம் பணத்தை பிடுங்கிக் கொண்டு விரட்டியடித்துள்ளனர். இதன்பேரில், வாணியம்பாடி போலீசில், ஆரிப் புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், ஆபிதா, தாரா, ஷாபுதின், நதீம், கோவிந்தராஜ், மனோஜ், அசேன், சதாம்உசேன், இப்ராஹிம், அஸ்லம், சாது என 9 ஆண்கள் கொண்ட 11 பேரை கைது செய்தனர். 

அவர்களை விசாரித்தபோது, ஆண்கள், பெண்கள் என பலரை இவ்வாறு மிரட்டி வீடியோ எடுத்து, பணம் பறித்து வந்ததாக ஒப்புக் கொண்டனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் காவலில் எடுத்து, விரிவான விசாரணை நடத்த உள்ளதாக, போலீசார் கூறியுள்ளனர்.

பொள்ளாச்சி ஆபாச வீடியோ கும்பல் சிக்கிய அதிர்ச்சி அடங்காத நிலையில், அதேபோல ஒரு கும்பல் சிக்கிய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.