திருமணமாகி 6 மாதம்..! ஹனிமூன் முடிஞ்சது..! திடீரென மனைவியை வேண்டாம் என்ற கூறிய கணவன்..! அதிர்ச்சி காரணம்! என்ன தெரியுமா?

பெங்களூரு: திருமணமாகி, தேனிலவு சென்றுவிட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில், திடீரென 'நீ அழகா இல்ல,' என்று கூறி மனைவியை கணவர் அடித்துள்ளார்.


பெங்களூரு அருகே உள்ள மாரேனஹள்ளியை சேர்ந்தவர் சசிக்குமார். 36 வயதாகும் இவர், சமீபத்தில் விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். விஜயலட்சுமிக்கு 32 வயதாகிறது. இருவரும் முழு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு,  தேனிலவு சென்று வாழ்க்கையை அனுபவித்துள்ளனர். பிறகு, ஒரு 6 மாதங்கள் மகிழ்ச்சியாகத்தான் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.  

திடீரென சசிக்குமார் நடத்தையில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அவர், மனைவியை பார்த்து, நீ அழகா இல்ல. அதனால, நாம பிரிஞ்சிடலாம். நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கப் போறேன் என்று கூறி தொல்லை தர தொடங்கியுள்ளார். அத்துடன் விவாகரத்து தரும்படியும் கேட்டுள்ளார். இதற்கு விஜயலட்சுமி மறுக்கவே,  அவரை சசிக்குமார் அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்.

இந்த விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவந்ததும், தம்பதியினரை சமாதானப்படுத்தி வைத்துள்ளனர். இருந்தாலும்,  சசிக்குமார் தொல்லை எல்லை மீறி சென்றுள்ளது.  ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் விஜயலட்சுமி தலையில் ஹெல்மெட்டால் சசிக்குமார் ஓங்கி அடித்துள்ளார். இதில், ரத்தக்காயம் அடைந்த விஜயலட்சுமி தற்போது  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சசிக்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.  வேறொரு பெண்கூட சசிக்குமாருக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பே அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட காரணம் என்று, விஜயலட்சுமி போலீசாரிடம் கூறியிருக்கிறார். இதுபற்றியும் போலீசார் விசாரிக்கின்றனர்.