நியூஸிலாந்து துப்பாக்கிச்சூடு! நூலிழையில் உயிர் தப்பிய வங்க தேச கிரிக்கெட் வீரர்கள்!

நியூஸிலாந்து நாட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.


நியூஸிலாந்து நாட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு அந்நாட்டில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் அந்நாட்டின் கிரைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிசூட்டில் பொது மக்கள் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி சூடு நடந்த நேரத்தில் வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் அந்த மசூதியில் இருந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த இடத்திலிருந்து அதிர்ச்சியில் வங்காளதேச வீரர்கள் வெளியேறி அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர்.

தற்போது வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் ஒரு ஹோட்டலில் பாதுகாப்புடன் தங்கவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிசூடு நடந்த இடத்தில் போலீஸ் தீவர் விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்வு குறித்து நியூஸிலாந்து நாட்டு பிரதமர் இது ஒரு கருப்பு தினம் என்று அறிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிசூட்டின் காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூஸிலாந்து மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பாதுகாப்பு பிரச்சனை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.