சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வாழைத்தண்டு

வாழை மரம் தரும் பழம் மட்டுமின்றி இலை, பூ, தண்டு என அத்தனை பகுதியுமே மனிதனுக்கு பயன்படக்கூடியது. வாழைத்தண்டு ஏராளமான பயன் தரக்கூடியது.


வாழைத்தண்டு சாறு குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் கரைவதுடன் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.

மாதவிலக்கு நேரத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும் பெண்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்லமுறையில் பயன் அளிக்கிறது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் சக்தி வாழைத்தண்டுக்கு உள்ளது. மேலும் வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தியும் உண்டு.

தீக்காயங்களுக்கு வாழைத்தண்டு சாறு, வாழைப்பட்டை நல்ல முறையில் பயனளிக்கும். மேலும் கருப்பை பிரச்னையையும் சரிப்படுத்துகிறது.