ஹர்திக் பாண்டியாவின் ஒத்தக் கை சிக்ஸ்! மிரண்ட பாக்.,! குழம்பிய கோலி!

நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியா ஒற்றைக் கையில் வினோத முறையில் சிக்சர் அடித்துள்ளார்.


இந்திய அணியினர் இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தன்னுடைய 4-ம் ஆட்டத்தில் விளையாடியது.

ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். வழக்கம்போல விராத் கோலி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை 336 ரண்களுக்கு உயர்த்தினர். ஆட்டத்தின் முதல் பாதியில் வினோதமான நிகழ்வு ஒன்று நடந்தது. 42 ஆவது ஓவரை பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான ஹசான் அலி வீசி கொண்டிருந்தார்.

அந்த ஓவரின் ஒரு பந்தில் ஹர்திக் பாண்டியா ஸ்ரேட்ய்ட் திசையில் சிக்சர் அடிக்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் பந்தை கோட்டைவிட்டார். பேட்டில் இருந்து ஒரு கை நழுவியது.

இருப்பினும் பேட்டின் பின்புறத்தில் பட்டு பந்தானது, விக்கெட் கீப்பர் திசைக்கு பின்பு சிக்சருக்கு சென்றது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். விராட் கோலி பந்தை சிக்சருக்கு செல்வதை பார்த்து ஆரவாரம் செய்தார்.

இந்த சிக்ஸரானது மைதானத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.