வழுக்கைத் தலை ஆண்கள் தான் வேணும்..! அடம்பிடிக்கும் இளம் நடிகை! ஏன் தெரியுமா?

வழுக்கை தலை ஆண்கள் தான் மிகவும் அழகானவர்கள் என்று பிரபல நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னனி  நடிகையாக திகழ்பவர்‌ யாமி கௌதம். இவர் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் 'பாலா' என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் ஆயுஷ்மான் குர்ஹான். 

இந்தப்படத்தில் ஆயுஷ்மானுக்கு, மிகவும் இளவயதில் வழுக்கை தலை விழுந்ததால் அவர் சற்று தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார். வீடியோ சமூகத்தின் சடங்குகளை தாங்கிக்கொண்டு அவர் எவ்வாறு முன்னேறுகிறார் என்பதை கதைக்களமாக கொண்டு திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. படத்தில் யாமி கவுதம் டிக்டாக் பாடகர் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவர் யாமி கௌதமை ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறார். கணவர் வழுக்கை தலை உடையவர் என்பதை அறிந்தவுடன் யாமிக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இந்த படமானது 4 நாட்களில் 52 கோடி 21 லட்சம் வசூலித்துள்ளது.  இதுகுறித்து சமீபத்தில் யாமி கவுதம் பேட்டியளித்துள்ளார். அதாவது, "படம் பாக்ஸ் ஆபீஸில் நன்றாக ஓடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரின் உழைப்பிற்கும் ஏற்ற வெற்றி கிடைத்துள்ளதாக கருதுகிறேன். மக்களிடமும் இந்த படம் நன்றாக சேர்ந்திருக்கிறது.

எனக்குஉண்மையிலே வழுக்கை தலை ஆண்களை மிகவும் பிடிக்கும். அவர்கள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்தப்படத்தின் மூலம் நாங்கள் யாரும் தங்களுடைய உடல் தோற்றத்தை வைத்து அசிங்கப்பட வேண்டியதில்லை என்பதை உணர்த்த எண்ணினோம். என்னிடமிருந்து அத்தகைய ஏமாற்றங்களை வரவழைப்பதற்கு இயக்குனர் மிகவும் சிரமப்பட்டார்" என்று கூறியுள்ளார்.

இந்த படமானது வெற்றி அடைந்தது படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.