சாகுறதுக்கு முன்னாடி..! மறைந்த நடிகர் பாலா சிங்கின் கடைசி ஆசை..! சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பாலா சிங் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில் அவருடன் தங்கியிருந்த நண்பர் ஒருவர் நடிகர் பாலா சிங் பற்றி வெளிவராத உண்மையை கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பு திறனின் மூலம் வில்லன் மற்றும் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பாலாசிங். இவர் இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார். இவரின் மறைவிற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் பாலா சிங்குடன் தங்கியிருந்த நண்பர் ஒருவர் அவரைப் பற்றி வெளியில் வராத சில உண்மைகளை கூறியுள்ளார்.

சினிமாவில் நடிப்பதற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்த பாலாசிங் அவர்கள், தனது ஊருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சென்னையில் வீடு எடுத்து தங்கியிருந்தார். 

அவரது நண்பரிடம் நடிகர் பாலா சிங்கை பற்றி கேட்டபோது, ஊர் திருவிழாவின்போது நடந்த நாடகத்தில் நடிக்க ஆள் வராத காரணத்தினால் , யாராவது நன்றாக நடிப்பார்களா என்று அந்த ஊரில் தேடிக்கொண்டிருந்தபோது பாலாசிங் அந்த நாடகத்தில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பை கண்ட மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து அவருக்கு உற்சாகம் அளித்துள்ளனர்.

இதன் மூலம் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் அடைந்தார் நடிகர் பாலா சிங். இவர் சினிமாவில் நடித்து தான் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் இல்லை. இவரது மனைவி ஆசிரியர் வேலையில் இருந்தார். மற்றும் வீட்டில் விவசாய வேலைகள் நன்றாகவே நடந்து கொண்டிருந்தன. எனினும் நடிப்பின் மீது ஏற்பட்ட பற்றின் காரணமாக சினிமாவில் நடிக்க முன் வந்தார் பாலாசிங். தொடர்ந்து சினிமாவில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்சினிமாவில் பிரபல நடிகரும் ஆனார்.

நடிகர் பாலா சிங்கிடம் ஏன் இந்த வயதிலும் கூட கஷ்டப்பட்டு சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஊருக்கு சென்று விடலாமே என்று நான் அவரிடம் கேட்டபோது, தனக்கு ஒரு ஆசை இருப்பதாகவும் அதனால்தான் இன்னும் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் நடிகர் பாலாசிங் கூறினாராம்.

எப்படியாவது 100 திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம். அந்த ஆசைப்படி என்ஜிகே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலாசிங் சினிமாவில் 100 படங்களை நடித்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். மேலும் சினிமா , நாடகம், தொலைக்காட்சி என எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வந்தாச்சு. எனக்கு இது போதும் என்று மனநிறைவாக நடிகர் பாலாசிங் தன்னிடம் கூறியதாகவும் அவரது நண்பர் கூறியுள்ளார்.