இறைவனுக்கு ஆறு மாதம் அணையாத விளக்கு... வாடாத மலர்..! - ஆயிரம் ஆண்டுகளாக அதிசயம் தொடரும் கோயிலை தரிசிக்க ஆசையா?

உத்தரகாண்ட் மாநிலm சமோலி மாவட்டத்தில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் ஒரு அழகிய பெருமாள் கோவில் அமைந்துள்ளது


இமய மலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இந்தக் கோயில் வருடத்தில் ஆறு மாதங்கள் மூடியும் ஆறு மாதங்கள் திறந்தும் இருக்கும். இத்தலம் கடல் மட்டத்துக்கு 10 ஆயிரம் அடி உயரத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது. பத்ரிநாத் கோயிலில் ஏழுமலையான் விஷ்ணு என்னும் நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இந்த கோயில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் மூடப்பட்டு அதற்கு அடுத்த வருடம் மே மாதம் திறக்கப்படும். கோயிலை மூடும் சமயத்தில் கருவறையில் பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் ஒரு தீபம் ஏற்றப்படும். ஆறு மாதங்கள் கழித்து கோயிலைத் திறக்கும்போது அந்த தீபம் அணையாமல் எரிந்தபடி இருக்கும். அது எப்படி இவ்வளவு காலம் அணையாமல் இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கோயில் மூடப்படும் போது இறைவனுக்குச் சாத்தப்பட்ட பூக்களும் அப்படியே வாடாமல் ஆறு மாதங்கள் வரை இருக்கின்றன இந்த அற்புதம் ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது.