53 வயது சூப்பர் ஸ்டார் நடிகருடன் தகாத உறவு! 26 வயது நடிகையின் புது விளக்கம்!

53 வயது சூப்பர் ஸ்டார் நடிகருடன் நெருக்கமாக இருப்பது குறித்து 26 வயதே ஆன பிரபல நடிகை நூதன விளக்கம் கொடுத்துள்ளார்.


  இந்திய திரையுலகின் வசூல் மன்னன் என்று கூறப்படுபவர் அமீர் கான். இவர் நடிப்பில் வெளியான டங்கல் திரைப்படம் தான் இந்திய திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகும். உலக அளவில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் டங்கல் வசூல் செய்துள்ளது. மேலும் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு படம் என்பது தான் அமீர் கானின் முடிவாகும்.

  அமீர் கான் நடிப்பில் உருவான பி.கே., தூம் 3 உள்ளிட்ட படங்களும் வசூல் சாதனை செய்தவை ஆகும். டங்கல் படத்தில் அமீர் கானின் மகளாக நடித்திருப்பவர் பாத்திமா சனா ஷேக். இந்த படத்தின் மூலம் இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக பாத்திமா உருவெடுத்துள்ளார். டங்கலுக்கு முன்னர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் 26 வயதான பாத்திமாவுக்கு முகவரி கொடுத்தது டங்கல் திரைப்படம் தான்.

  டங்கல் படத்தை தொடர்ந்து வேறு படங்களில் பலர் நடிக்க கேட்டும் பாத்திமா, அமீர் கானின் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்தில் தான் நடிக்க ஒப்புக் கொண்டார். தீபாவளி வெளியீடாக வெளியான தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் தோல்வி அடைந்தது. இதனிடையே டங்கல் படத்திற்கு பிறகு பாத்திமா அடிக்கடி அமீர் கானுடன் தென்பட ஆரம்பித்தார். மும்பையில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் பாத்திமா – அமீர் கானை ஜோடியாக பார்க்க முடிந்தது.

  மேலும் மும்பையில் அமீர் கான் இருந்தால் அவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் பாத்திமாவும் இருப்பார். அத்துடன் அமீர் கான் வீட்டுக்கு எந்த நேரத்திலும் பாத்திமா சனா கான் சென்று வரக்கூடியவர். ஏராளமான முறை அமீர் கான் வீட்டின் அருகே பாத்திமா சனா ஷேக்கை புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்து தள்ளியுள்ளனர். இதனால் 56 வயதான அமீர் கானுடன் 26 வயதே ஆன பாத்திமாவுக்கு முறையற்ற உறவு இருப்பதாகவும், இருவரும் ஒன்றாக வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

தக்ஸ் ஆஃப் இந்தூஸ்தான் தோல்விக்கு பிறகு தொலைக்காட்சி ஒன்றுக்கு பாத்திமா பேட்டி அளித்தார். அப்போது சூப்பர் ஸ்டார் அமீர் கானுடன் நெருக்கமாக இருப்பது பற்றியும், இருவருக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக சொல்லப்படுவது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பாத்திமா, இது போன்ற தகவல்களை கேட்டு தனக்கு அழுத்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் தனக்கும் – அமீர் கானுக்கும் இடையிலான உறவு குறித்து விளக்கம் அளிக்க தான் விரும்பவில்லை என்றும் பாத்திமா தெரிவித்துள்ளார்.

  செய்தித்தாள்களில் தன்னையும் – அமீர் கானையும் இணைத்து வெளியாகும் செய்திகள் குறித்து எனது தாயாரே என்னிடம் விளக்கம் கேட்பார் என்றும், நான் கூட விளக்கம் அளிக்க முயற்சி செய்வேன் என்றும் பாத்திமா தெரிவித்துள்ளார். ஆனால் விளக்கம் அளிப்பதால் பயனில்லை என்பதால் அது போன்ற செய்திகளை கண்டுகொள்வதில்லை என்று அவர் கூறியுள்ளார். நடிகர் அமீர் கானுக்கு தற்போது 56 வயதாகிறது. அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்துள்ளார்.

மேலும் கிரண் ராவ் என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளார். தற்போது கிரண் ராவுடன் தான் அமீர் கான் வசித்து வருகிறார். இந்த நிலையில் தான் 26 வயதான பாத்திமாவுடன் இணைத்து அமீர் கான் கிசுகிசுக்கப்படுகிறார்.