வேகமாக வந்து உரசிய ஆடி கார்! சடன் பிரேக் போட்ட லாரி டிரைவர்! பின்னால் மாருதி காரில் வந்த பெண்களுக்கு நேர்ந்த கோரம்!

நின்று கொண்டிருந்த லாரி மீது அதி வேகமாக வந்த கார் மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்திருக்கும் சம்பவமானது திண்டிவனம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் என்னுமிடம் அமைந்துள்ளது.இதனருகே கன்னிகாபுரம் அமைந்துள்ளது.கன்னிகபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த ஆடி கார் லாரி மீது உரசியுள்ளது.

இதனால் லாரி ஓட்டுனர் சடன் பிரேக் போட்டு லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது அதி வேகமாக வந்து கொண்டிருந்த கார் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியுள்ளது.  காரில் பயணம் செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த டிரைவர் என்ற இளைஞரும் இவர்களுடன் பயணித்த அருண்குமார் என்பவரும் பலத்த காயங்களுடன் தவித்து கொண்டிருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு திண்டிவனத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தினால் திண்டிவனம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.