ரயில் மேடையில் நடந்த திடீர் பிரசவம்! அழகு குழந்தை குவா குவா - திருநெல்வேலி பரபரப்பு!

ரயில் நடைமேடையிலேயே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்த சம்பவமானது நெல்லையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் மாரியம்மாள். மாரியம்மாளின் வயது 28. இவருடைய தாயாரின் வீடு கடையத்திலுள்ளது. அங்கு செல்வதற்காக அவர் திருநெல்வேலி இரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்.

அப்போது எதிர்பாராவகையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்ததை கண்ட பிற பயணிகள் ரயில்வே காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். 

உடனடியாக ரயில்வே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து 108 ஆம்புலன்ஸை ரயில் நிலையத்துக்கு வரவழைத்தனர். ஆனால் அவருக்கு பிரசவ வலி தீவிரமாக ஏற்பட்டதால் செய்வதறியாது திகைத்தனர்.

பிறகு ரயில் நடைமேடையிலே அவருக்கு சில பெண்களின் உதவியோடு பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு இறுதியாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

பெண்ணுக்கு தக்க சமயத்தில் உதவிய காவலர்களுக்கும், செவிலியர்களுக்கும் பிற பயணிகள் பாராட்டி நன்றி தெரிவித்தனர். 

இந்த சம்பவமானது திருநெல்வேலி ரயில் நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.