குழந்தைக்கு தாயான திருநங்கை! கணவனின் ஆசையை நிறைவேற்றினார்!

இந்தியாவிலேயே முதல்முறையாக திருநங்கையொருவர் குழந்தை பெற்றெடுத்திருக்கும் சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் வாழ்ந்து வரும் திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் திருநங்கை அக்கை பத்மசாலி. இவருக்கு சமூக செயற்பாட்டாளரான வாசுதேவ் என்பவருடன் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இதுவே திருநங்கைகளுக்கு நடைபெற்ற திருமணங்களில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டதாகும்.

திருமண தம்பதிகள் தற்போது ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். அந்த குழந்தைக்கு அவின் என்று பெயரிட்டுள்ளனர். அக்கை கூறுகையில், "நான் இப்பொழுது ஒரு தாயாக விரும்பினேன். நான் இப்போது மனநிறைவாக உள்ளேன். எங்கள் இரு குடும்பங்களும் குழந்தையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

குழந்தை தாயின் மடியில் தவழ்ந்து விளையாடுவதைக்கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். என் குழந்தை வளர்ந்து வரும் காலத்தில் எந்தவித பாகுபாட்டையும் எதிர்கொள்ளாது என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

இந்தியாவிலேயே முதன்முதலில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர் என்ற பெருமையை பெற்றவர் அக்கை பத்மசாலி என்பது குறிப்பிடத்தக்கது.