திருமணமான 10 வருடங்களுக்கு பிறகு மனைவி கர்ப்பம்! துள்ளிக் குதிக்கும் தொலைக்காட்சி நடிகர்!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சாண்ட்ரா எமி கர்ப்பமாகியுள்ளார்.


மலையாளத்தில் கஸ்தூரிமான் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சான்ட்ரா எமி. வீடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் பின்னர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார். 

சசிகுமார் நடித்திருந்த போராளி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், சிங்கம் பாகம் 3 , அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

நடிகை சான்ட்ரா எமி சன் டிவியில்  வீடியோ ஜாக்கியாக பணியாற்றி பின்னர் நடிகரான பிரஜினை திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் இவர் கதாநாயகனாக நடித்து இருப்பார்.

இருவருக்கும் திருமணம் நடைபெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் தற்போது மகிழ்ச்சிகரமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. அவருடைய வீட்டில் விரைவில் குழந்தை சத்தம் கேட்க போகிறது. தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை காதலர் தினத்தன்று பிரஜின் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் தனது மனைவி கர்ப்பமாக இருக்க அவரது வயிற்றை தொட்டபடி பிரஜின் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களை பலரும் பார்த்து ரசிப்பதுடன், அந்தத் தம்பதிக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
விரைவில் நல்ல செய்தி வரும் என்று தனது ரசிகர்களை அவ்வப்போது உற்சாகத்தில் ஆழ்த்திய பிரஜின் தற்போது அந்த செய்தியை வெளியிட்டு உள்ளார்.