தினமும் லேட் நைட் வீட்டுக்கு வந்த டிவி நடிகர்! இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!

பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகரான மதுபிரகாஷின் மனைவி தற்கொலை செய்த சம்பவமானது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கு சீரியல்களினால் மிகவும் பிரபலம் அடைந்தவர் மதுபிரகாஷ். இவர் உலகப்புகழ் பெற்ற பாகுபலி திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய மனைவியின் பெயர் பாரதி. 2015-ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர் பிரபல ஐ.டி நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். 

கடந்த சில மாதங்களாகவே பாரதி மற்றும் பிரகாஷ் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. பாரதிக்கு பிரகாஷ் சினிமா துறையில் ஈடுபடுவது அறவே பிடிக்கவில்லை. இரவு நெடுநேரமான பிறகு மதுபிரகாஷ் வீட்டிற்கு வருவது பாரதிக்கு அறவே  ஒத்துவரவில்லை. இதனால் இவ்விருவரிடையே பெரும் தகராறுகளும் ஏற்பட்டுள்ளன.

நேற்று காலை மதுபிரகாஷ் பாரதியிடம் ஜிம் செல்வதாக  கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மனைவியிடம் பொய் கூறிவிட்டு அவர் சீரியலில் நடிக்க சென்றிருந்தார். இதனையறிந்த பாரதி கடும் கோபமடைந்தார். பிரகாஷுக்கு கால் செய்து தற்கொலை செய்து கொள்வதாக பாரதி மிரட்டியுள்ளார். மது பிரகாஷ் இதனை சற்றும் கண்டுகொள்ளவில்லை.

வழக்கம் போல இரவு தாமதமாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாரதி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அப்பகுதி காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாரதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.