197 ரூபாய்க்கு தினமும் 2ஜிபி டேட்டா! 57 நாட்கள் வேலிடிட்டி! வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் ஆஃபர்! எந்த நெட்வொர்க் தெரியுமா?

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ரீசார்ஜ் ஆஃபர்களால் சந்தோஷமடைந்துள்ளார்.


தொலைதொடர்பு நிறுவனங்கள் தற்போது ரீசார்ஜ் தொகைகளை உயர்த்திய வண்ணமுள்ளனர். அதன்படி வோடஃபோன், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தங்களுடைய ரிசார்ட்ஸ் திட்டங்களை 42 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். ஆனால் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் எந்தவித ரீசார்ஜ் உயர்வையும் கடைபிடிக்கவில்லை. 

மேலும் இணையதளவாசிகளுக்கு உபயோகப்படும் வகையில் 197 ரூபாய்க்கு தினமும் 2 ஜிபி டேட்டா அளிக்கப்போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாலிடி 54 நாட்கள் வரை நீடித்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் எவ்வித கால் வசதியும் இருக்காது என்றும் கூறியுள்ளது. 

டேட்டா மற்றும் கால் வசதிகள் இணைந்தே கிடைக்க வேண்டுமென்றால் 939 ரூபாய் அல்லது 448 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. 939 ரூபாய் திட்டமானது மொத்தம் 80 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தினமும் ஒரு ஜிபி டேட்டாவும், 250 நிமிட குரல் அழைப்பு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 448 ரூபாய் ப்ரீபெய்டு திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும், 250 நிமிடம் இலவச குரல் அழைப்பும் அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனைக் கேட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.