ஜியோவுக்கு மட்டுமே சலுகை! மத்திய அரசை குற்றஞ்சாட்டி BSNL ஊழியர்கள் ஸ்டிரைக்!

4ஜி சேவை உரிமம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்கின்றனர்.


அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி சேவை உரிமம் வழங்க வேண்டும்,பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் நிலத்தை அரசு பிஎஸ்என்எல் பெயரிலேயே மாற்றி தர வேண்டும்,

ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களும் தமிழகத்தில் 14,000 ஊழியர்களும் முழுமையாக  பங்கேற்றுள்ளனர்.

ராணுவ வீரர்களின் மரணம் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் BSNL ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக மத்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மத்திய அரசாங்கம் ரிலையன்ஸ், ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவான முறையில் செயல்படுதவதால் BSNL நிறுவனத்திற்கு எந்த சலுகையும் கொடுப்பதில்லை என்றும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது மத்திய அரசு  அடக்குமுறைகளை ஏவி வருவதாகவும் BSNL ஊழியர்கள் தெரிவிக்கின்றன்ர்.

ஊழியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பணிகளை மேற்கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் பி.எஸ்.என்.எல்.

தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

பேட்டி- நடராஜன்- BSNL சங்கத்தின், மாநில ஒருங்கிணைப்பாளர்