கோடி ரூபாய் பிஎம்டபிள்யூ காரை ஆற்றுக்குள் தள்ளிவிட்ட ஓனர்! காரணத்தைக் கேட்டா அதிர்ந்தே போவீங்க!

பி.எம்.டபிள்யூ. காரை இளைஞர்கள் ஆற்றில் தள்ளிவிட்ட வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


ஹரியானா மாநிலத்தில் யமுனா நகர் எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஜமீந்தாரின் மகன் அவரிடம் தனக்கு ஜாகுவார் கார் வேண்டுமென்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த ஜமீன்தார், ஜாகுவார் இல்லாமல் பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்தார்.

தான் கேட்ட காருக்கு பதிலாக வேறொன்றை வாங்கி கொடுத்ததால் ஜமீன்தாரின் மகன் ஆத்திரம் அடைந்தார். காரை வாங்கிய மறுநாளிலேயே அதனை அப்பகுதியில் உள்ள ஆற்றில் தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை அந்த இளைஞர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். 

அந்த கார் ஆற்றின் நடுவில் இருந்த பெரிய புற்றில் சிக்கிய கொண்டது. பின்னர் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களின் உதவியோடு காரை மீட்க முயற்சித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜமீன்தாரின் மகன் கீழே தள்ளிவிட்ட காரின் மதிப்பு குறைந்தது 35 லட்சமாவது இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.