நேற்று நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றிய நேரத்தில் பாஜக மகளிரணி தலைவர் ஒருவர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவப்பு புடவை...! கையில் துப்பாக்கி..! விளக்கேற்றும் நேரத்தில் பாஜக மகளின் அணி தலைவி அரங்கேற்றிய பகீர் செயல்!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 70,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 12,80,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதிலும் 4067 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 292 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 76 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது. 571 பேர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரையும் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு பக்கபலமாக இருப்பது சுட்டி காட்டுவதற்காக மின்விளக்குகளை அனைக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள பல்ராம்பூர் மாவட்டத்தின் மகளிரணி தலைவியான மஞ்சு திவாரி விளக்கேற்றிய நேரத்தில் வானை நோக்கி தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த வீடியோவானது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்துள்ள பலரும் அவருடைய மோசமான செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.