மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்! தமிழக அரசு தீர்மானம்! பாஜக கண்டனம்!

தமிழக அரசு மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கொண்டுவருவதற்கான அவசர சட்டத்தை இயற்றியுள்ளது.


தமிழ்நாட்டில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் பற்றிய தகவல்கள் சூடு பிடித்திருக்கும் நிலையில் அதிமுக அரசு மறைமுக தேர்தலுக்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது. இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 

அதில், உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு முறைமுக தேர்தல் முறையை மீண்டும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மறைமுக தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

தற்போது அதிமுக அரசு மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலமாக மறைமுகமாக மேயர் தேர்ந்தெடுக்கபடுவார்.

இந்த மறைமுக தேர்தல் முறையை எதிர்த்து எதிர்த்து தமிழக பாஜக பொருளாளர் எஸ். ஆர். சேகர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.