திகாரில் சிதம்பரத்துக்கு அடுத்து கமல்நாத்? மத்திய பிரதேசத்தை குறிவைக்கும் பா.ஜ.க.!

மத்திய பிரேதச முதல்வரை துறத்தும் 1984 கலவர வழக்கு! அடுத்த திஹார் கெஸ்ட் கமல்நாத்?


ப.சிதம்பரத்தை அடுத்து மத்தியபிரதேச முதல்வரை திஹாருக்கு அனுப்ப திட்டமிடுகிறது பிஜேபி அரசு என்று புதிய பரபரப்பு கிளம்பி இருக்கிறது டெல்லியில்!. ஏற்கனவே முன்னால் மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் அரசு நடவடிக்கைகளில் தலையிடுகிறார்,என்று வனத்துறை அமைச்சர் உமங் சிங்கார் மேலிடத்தில் கொடுத்த புகாரால் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால் கமல்நாத் விழி பிதுங்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் டெல்லியில் இருக்கும் குருத்வாரா ரெகாட்கானில் சீக்கியர்களுக்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அக்டோபர் 31ம் தேதி 1984ம் ஆண்டு இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து வட இந்தியா முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது.அந்தக் கலவரத்தில் 3325 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

அதில் டெல்லியில் மட்டும் 2433 பேர் கொல்லப்பட்டனர்.அது சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க 2015 ஃபிப்ரவரி 12ல் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.அவற்றில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் பிரமுகர்களில் இன்றைய மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தும் ஒருவர்.இதில் கமல்நாத் எப்போதோ விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த வழ்க்குக்கு மீண்டும் புத்துயிர் வந்திருக்கிறது.அகாலி தள் கட்சி பிரமுகர் மஜீந்தர் சிங் சிர்சா வழக்கு என் 601/ 84 ஐ மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இதுபோல மொத்தம் 7 வழக்குகள் மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன.அந்த வழக்கு ஏற்றுக்கொள்ளப் பட்டதை தொடர்ந்து மஜீந்தர் சிங் சிர்சா தனது டிவிட்டர் பக்கத்தில் ' உங்கள் தினங்கள் எண்ணப்படிகின்றன கமல்நாத் ஜி,விரைவில் திஹார் ஜெயிலில் இருக்கும் உங்கள் நண்பர் சஜன் குமாருடன் இணைந்து கொள்ளப் போகிறீர்கள்' என்று ட்வீட் செய்திருக்கிறார்.

சாஜன் குமார் இந்திராகாந்தி கொலையைத் தொடர்ந்து டெல்லியில் ஏற்பட்ட கலவரத்துக்கு காரணமானவராக குற்றம் சாட்டப்படு,தண்டனைக்கு உள்ளாகி திஹார் ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.