தமிழிசை சௌந்தர்ராஜன்தான் கலைவாணியா..? பா.ஜ.க.வை ஒழிக்காம விட மாட்டீங்களா?

தங்களுக்குப் பிடித்த தலைவர்களை விதவிதமாக வரைந்து அலப்பறை கொடுப்பது சினிமா ரசிகர்களிடம் ஏற்பட்ட பழக்கம்.


இது, அரசியல் தொண்டர்களையும் தொற்றிக்கொண்டது. அந்த வகையில் அரசியல் தலைவர்களை, நேரடியாக கடவுளாகவே மாற்றிவிடுகிறார்கள். இப்போது அந்த வகையில் கலைவாணியாக மாறியிருக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஒரு புதுமனை புகுவிழாவுக்காக வைக்கப்பட்ட ஃபிளக்ஸில்தான் இந்த அட்ராசிட்டி.-

தமிழிசை சௌந்தர்ராஜன் தலையை எடுத்து கலைவாணியின் உடலில் சொருகியுள்ளனர். இதைப் பார்த்து பாராட்டியவர்களைவிட, வயிறு வலிக்க சிரித்தவர்கள்தான் அதிகமாம். ஏதோ நோட்டாவுக்கு அருகே பா.ஜ.க. ஓட்டு வாங்கிவருகிறது, அதையும் காலி செய்யாமல் இந்தத் தொண்டர்கள் விட மாட்டார்கள் போலிருக்கிறதே!