பி.ஜே.பிக்கு 50 சீட்டுதான்! மோடி, அமித் ஷாவை தெறிக்கவிட்ட சுப்பிரமணியன் சுவாமி

மோடியின் டீம் என்றாலும் அவ்வப்போது பி.ஜே.பி.க்கு எதிராக ட்வீட் போட்டு அலற வைப்பது சுப்பிரமணியன் சாமியின் வழக்கம்.


அப்படித்தான் இன்று பி.ஜே.பி.க்கு 50 சீட் கிடைக்கவில்லை என்றால் எனக்கு பெரும் ஆச்சர்யமாக இருக்கும் என்று ஒரு ட்வீட் போட்டுவிட்டார்.

உடனே மோடியின் ஆட்கள் கொந்தளித்துவிட்டார்கள். ஆளாளுக்கு  சுப்பிரமணியன் சுவாமிக்கு போன் போட்டு கொந்தளிக்க, அவசரமே இல்லாமல், கொஞ்ச நேரம் கழித்து, நான் சொன்னது உத்திரப் பிரதேசத்தில் மட்டும் என்று அடுத்த ட்வீட் போடுகிறார்.

அதாவது உத்திரப்பிரதேசத்தில் மட்டும் பி.ஜே.பிக்கு 50 சீட்டுக்கு மேல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாராம். அதைத்தான் அப்படி இரண்டு ட்வீட்டாகப் போட்டாராம். இரண்டாவது ட்வீட்டைக் கண்டு பா.ஜ.க.வினர் இன்னமும் கொந்தளித்திருக்கிறார்களாம்.

ஏனென்றால் உ.பி.யில் கடந்த முறை ஏகமாய் சீட்டுகளை அள்ளியது பா.ஜ.க. இந்த முறை மாயாவதியும் அகிலேஷும் ஒன்றுசேர்ந்துவிட்டதால் இருபது சீட் கிடைப்பதே கடினம் என்பதுதான் உண்மையான நிலை. அது தெரிந்தும் இப்படி போட்டால், ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்கிறார்கள். 

ஆனால், சுவாமியோ எப்போதும் போல் கண்டுகொள்ளாமல் அடுத்த பிரச்னையைத் தேடிப்போய்விட்டார்.