என்கிட்டவே தப்பா நடந்துகிறியா? அரசு அதிகாரியை செருப்பு பிய்ய பிய்ய விளாசிய பெண் பாஜக தலைவர்! சூடான வீடியோ உள்ளே..!

உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது பாஜக கட்சியை சேர்ந்த சோனாலி போகாட் ஹரியானாவில் ஒரு அதிகாரியை தன்னுடைய செருப்பால் அறைந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.


பாஜக கட்சியை சேர்ந்த சோனாலி போகாட் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான நட்சத்திரமாக வலம் வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி சார்பாக ஹரியானா தொகுதியில் போட்டியாளராக அறிவிக்கப்பட்டவர் தான் சோனாலி போகாட். பாஜக பிரபலமான சோனாலி உழவர் சந்தையை பார்வையிட்டு இருக்கிறார். அப்பொழுது உழவர்கள் பல புகார்களை அவரிடம் கூறியிருக்கின்றனர். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த அவர் அவர்களது குறையை நிவர்த்தி செய்து தருமாறு அதிகாரி சுல்தானிடம், சோனாலி கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு அந்த அதிகாரி சோனாலி யை பார்த்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சோனாலி என்னுடைய செருப்பை எடுத்து அதிகாரியின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்து இருக்கிறார். இதனை தொடர்ந்து போலீஸ் போலீஸ் என்று கத்தி இருக்கிறார் சோனாலி. இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அரசியல் வட்டாரத்திலும் சோனாலியின் இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ட்விட்டரில் வெளியான இந்த வீடியோ பதிவு தற்போது பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் தங்களுடைய கண்டனங்களை சோனாவுக்கு எதிராக தெரிவித்துள்ளனர்.