ஜார்கண்ட் தேர்தல்! சூடுபிடிக்கும் பிரச்சாரம்! அனல் பறக்கும் அமித்ஷாவின் பேச்சு!

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக அமித்ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


ஜார்கண்ட் மாநிலத்தை பாஜக கட்சி ஆட்சி செய்து வருகிறது. இவர்களுடைய ஆட்சிக்காலம் வருகிற 2020, ஜனவரி 5ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஆகையால் நவம்பர் 30ஆம் தேதி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

 தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது. மொத்தம் 3.2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தற்போது பாஜக ஆண்டு வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் அவர்களை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் அமித்ஷா, ஜார்கண்ட் மாநிலத்தில் அயோத்தி வழக்கை வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் முதற்கட்டமாக பாஜக மீண்டும் ஆட்சி பிடிப்பதற்காக ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றது. 

அதுமட்டுமில்லாமல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும் பயன்படுத்தி அமித்ஷா பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக கட்சி தனித்து நின்று தேர்தலை சந்திக்க உள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் பாஜக கட்சியை சார்ந்த அமைச்சர் தன்னுடைய பிரச்சாரத்தை ராஞ்சியில் துவங்கியுள்ளார். 

அப்போது பேசிய அவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டுமா ? வேண்டாமா? என்று அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார். இதற்கு எதிராக நின்றுகொண்டிருந்த காங்கிரசை எதிர்த்து மோடி அரசு அயோத்தி வழக்கில் வெற்றியைப் பெற்று தந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஜார்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்காக  ரூ. 55,253 கோடி ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால், மோடி தலைமையிலான அரசு  ரூ. 3,08,487 கோடி ஒதுக்கியது. 

ஆகையால் காங்கிரஸ் கட்சியை காட்டிலும் மோடி அரசுதான் ஜார்கண்ட் மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு அதிக நிதியை ஒதுக்கி உள்ளது என்று அவர் கூறினார். அமிர்ஷா இத்தகைய அனல் பறக்கும் பிரச்சாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக வுக்கு வெற்றியை தருமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.