படுக்கை அறைக்கு 2 நடிகைகள் கேட்ட மத்திய அமைச்சர்! சு.சாமி வெளியிட்ட லஞ்சத் தகவல்!

சர்ச்சைக் கருத்துக்களுக்கு பெயர் பெற்ற பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியசாமி தற்போது அமைச்சர் ஒருவர் ஊழல் விவகாரம் ஒன்றில் 2 பாலிவுட் நடிகைகளை லஞ்சமாகக் கேட்டதாக டிவிட்டரின் பதிவிட்டுள்ளார்.


அவரது பதிவு இதுதான். அமைச்சர் ஒருவர் ஒரு திட்டப்பணிக்கான ஒப்புதல் பணிகளை முடித்துக்கொடுக்க லஞ்சமாக இரண்டு பாலிவுட் நடிகைகளை பாலியல் உறவுக்கு அமைத்துக் கொடுக்க வலியுறுத்தினால் அவருக்கு என்ன தண்டனை என்பது தொடர்பாக தாம் ஆய்வு செய்து வருவதாகவும், இது குறித்து வேறு எவருக்கேனும் ஏதாவது ஆலோசனை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

அவர் எந்த அமைச்சர் என்றோ எந்த நடிகைகள் என்றோ என்ன திட்டப் பணி என்றோ குறிப்பிடவில்லை என்ற போதும், இதுவும் வழக்கம் போல அதிர்வலையை ஏற்படுத்தும் பதிவு தான். இதுவும் சுப்பிரமணியசாமி வழக்கம் போல வெளியிடும் தடலடிப் பதிவுகளில் ஒன்றா அல்லது இதில் உண்மை இருக்க வாய்ப்புள்ளதா என விவாதங்கள் கிளம்பியுள்ளன. 

வழக்கமாக அமைச்சர்கள் பணிகளை செய்து கொடுக்க பணம் தான் கேட்பார்கள். ஆனால் இந்த மத்திய அமைச்சரோ இரண்டு நடிகைகளை கேட்டுள்ளார். எனவே இந்த விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.