இஸ்லாமிய எம்.எல்.ஏ.வை மிரட்டிய பா.ஜ.க. அமைச்சர்..! - ஜெய் ஸ்ரீராம் விறுவிறு

இப்போதுதான் 46 பிரபலங்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை ஆயுதமாக்காதீர்கள் என்று மோடிக்கு கடிதம் எழுதி,பிஜேபி தரப்பு பதிலுக்கு எழுத ஊரெல்லாம் அதே பேச்சு


இந்த எதிர்ப்பை எல்லாம் பிஜேபி பொருட்படுத்தவே இல்லை என்பதர்கு லேட்டஸ்ட் உதாரணமாக புறப்பட்டு இருக்கிறார்  ஜார்கண்ட் மாநில அமைச்சர் சி.பி சிங்.ஜார்கண்ட் மாநில நகர்புற வளர்ச்சி, வீட்டு வசதி,மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் சி.பி சிங் ராஞ்சி நகரில் , சட்டமன்ற வளாகத்துக்கு உள்ளேயே  ஜம்தாரா தொகுதி காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர் இர்ஃபான் அன்சாரியை,ஜெய் ஸ்ரீராம்' கோஷம் போடும்படி மிரட்டும் கானொளி இப்போது வைரலாகிக் கொண்டு இருக்கிறது.

அந்த வானொளியில் இர்பான் அன்சாரியின் கையை பிடித்து இழுத்தும் , தோளில் கைவைத்தும், தைமூரும்,கில்ஜியும்,பாபரும் உன் முன்னோர்கள் அல்ல,அவர்கள் பாபரின் ஆட்களல்ல,ஸ்ரீராமனின் ஆட்கள்தான் என்கிறார்.ராமன் பேரைச்சொல்லி மிரட்டாதீர்கள்.இப்போது தேவை மின்சாரம்,சாக்கடை வசதி,வேலைவாய்ப்பு, என்கிறார்.

இதையெல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், தொடர்ந்து ,ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வற்புறுத்தி பிடித்து இழுக்கிறார் அமைச்சர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவுக்கே இதுதான் கதி என்கிற  நிலைக்கு வந்துவிட்டது இந்தியா.