கட்சி அலுவலகத்தில் வைத்து மனைவிக்கு அடி உதை! பாஜக தலைவரின் விபரீத செயல்! யார், ஏன் தெரியுமா?

டெல்லி: பொதுமக்கள் முன்னிலையில் மனைவியை அடித்த பாஜக பிரமுகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


டெல்லியின் தெற்கே உள்ள மெஹ்ராலி மாவட்டத்தின் பாஜக தலைவராக ஆசாத் சிங் என்பவர் உள்ளார். இவரது மனைவி, தெற்கு டெல்லி மாநகராட்சியின் முன்னாள் மேயர் ஆவார். இந்நிலையில், வியாழக்கிழமை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேத்கர் தலைமை வகித்துள்ளார். இந்த கூட்டத்திற்கு, கணவன், மனைவி இருவரும் தனித்தனியாக வந்த நிலையில், கூட்டம் முடிந்த வெளியே வந்தபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.  

பாஜக நிர்வாகிகள், ஊடகத்தினரின் கண் முன்னே ஆசாத் சிங், அவரது மனைவியை சராமரியாக அடித்தார். இது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக, ஆசாத்தை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக, மேலிடம் அறிவித்துள்ளது.

ஆசாத் சிங், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து மோதல் இருந்து வருவதாகவும், இதன்பேரில் விவாகரத்து கோரி இருவரும் விண்ணப்பித்துள்ளனர் எனவும், பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இதற்கிடையே, மனைவியை அடித்தது பற்றி ஊடகங்களில் பேட்டி அளித்துள்ள ஆசாத் சிங், பொது இடத்தில் வைத்து என்னை தரக்குறைவாக பேசி தாக்கியதால்தான், மனைவியை அடிக்க நேரிட்டது, என்று கூறியுள்ளார். ஆசாத் சிங், அவரது மனைவியை அடிக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.